3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று: கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் மூடல்


3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று: கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் மூடல்
x
தினத்தந்தி 13 May 2021 4:32 PM IST (Updated: 13 May 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 24 வயது கொண்ட பெண் காவலர், 24 வயது கொண்ட ஆண் காவலர் மற்றும் 32 வயது கொண்ட முதுநிலை ஆண் காவலர் உள்பட மொத்தம் 3 பேருக்கு கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், நேற்று காலை கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் மூடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் தற்போது 2-வது முறையாக மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story