திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 21 பேர் பலி; ஆயிரத்து 344 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 21 பேர் பலி; ஆயிரத்து 344 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 May 2021 5:22 PM IST (Updated: 13 May 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 21 பேர் பலியானார்கள். ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2-வது அலை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை.அதே போல திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் பலி எண்ணிக்கையும் பத்தை தாண்டி வருகிறது.

21 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 344 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 74 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 65 ஆயிரத்து 904 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.7 ஆயிரத்து 814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 942 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் இல்லாத அளவிற்கு 21 பேர் இறந்து உள்ளனர்.

Next Story