தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தனியார் பல்கலைக்கழகங்களில் பாரத் உயர்கல்வி நிறுவனம் முதல் இடம்
தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தனியார் பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தில் இருப்பதாக, பட்டியலை வெளியிட்டு இருக்கும் சிமேகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் உயர்கல்வி நிறுவனம்
முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகனை நிறுவனராக கொண்டு செயல்படும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் முதல் இடம் கிடைத்து இருக்கிறது. 2020-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்ட சிமேகோ நிறுவனத்தின் பட்டியலில் தான் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.இந்த தரவரிசை நிறுவனங்களின் கல்வி ஆராய்ச்சி வெளியீடு, புதுமையான கண்டுபிடிப்புகளின் வெளியீடுகள், பகுப்பாயும் தன்மை மற்றும் சமூக தாக்கம் போன்ற குறியீடுகளின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து 4 ஆயிரத்து 126 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த தரவரிசை பட்டியலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முதல் இடம்
அந்தவகையில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தனியார் இந்திய பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்தத்தில் (ஓவர் ஆல் ரேங்க்) முதல் இடத்தை பெற்று இருக்கிறது. இந்தியாவில் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தனியார் பல்கலைக்கழகம் இது மட்டுமே.அதேபோல், இந்தியாவில் ஆராய்ச்சியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அதிலும் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த 300 இடங்களில் உள்ள ஒரே இந்திய நிறுவனமாகவும் இது உள்ளது.இதுதவிர என்ஜினீயரிங், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வானியல் போன்ற தலைசிறந்த 4 பாடங்களுக்கான தரவரிசையில் தலைசிறந்த பல்கலைக்கழகமாகவும் திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜெகத்ரட்சகன் பாராட்டு
அதுமட்டுமில்லாமல், வணிக மேலாண்மையில் 7-வது இடம், மருத்துவத்தில் 12-வது இடமும் கிடைத்து இருக்கிறது. இந்த இடத்தை எட்டிப்பிடிக்க காரணமாக இருந்த ஆசிரியர்களை எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பரிசுகள் வழங்கி பாராட்டினார். அதேபோல், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜே.சந்தீப் ஆனந்த், நிறுவனத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு, 'இந்தியாவில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் நிறுவனம் முன்னிலை வகிப்பது என்பது பெருமைக்குரிய தருணம்' என்றும் கூறினார்.
Related Tags :
Next Story