ரம்ஜான் பண்டிகை: ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில் இயக்கம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


ரம்ஜான் பண்டிகை: ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில் இயக்கம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2021 4:03 PM IST (Updated: 14 May 2021 4:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி சென்னையில் சாதாரண நாட்களில் 288 மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படுகிறது. மேலும் அரசு விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையே பின்பற்றப்பட்டு வருகிறது.இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை பொது விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

அதன்படி சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே காலை 4.45 மணி முதல் இரவு 10.10 மணி வரையிலும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 5.15 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 5 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் 86 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story