ரெம்டெசிவிர் மருந்து குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்; சுகாதாரத்துறை வேண்டுகோள்


ரெம்டெசிவிர் மருந்து குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்; சுகாதாரத்துறை வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 May 2021 4:32 PM IST (Updated: 15 May 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

ரெம்டெசிவிர் மருந்து குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெம்டெசிவர் மருந்து

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு அரசு மருந்தகத்தை அணுகுங்கள் என்று ஒரு செய்தி உலா வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல். மத்திய அரசு புதுவைக்கு என்று ரெம்டெசிவிர் மருந்தை கொடுத்து உள்ளது. அதனை அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு (ஜிப்மர் உட்பட) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கு ஏற்ப மருத்துவர்கள் இந்த மருந்தை கொடுப்பார்கள்.

இலவசமாக...

அரசாங்கம் மூலம் அனுமதிக்கப்பட்ட அனைத்து புதுவை நோயாளிகளுக்கும் இந்த மருந்து இலவசமாகத் தான் தரப்படுகிறது. இதனை கண்காணிக்க ஒரு மருத்துவ குழுவை நியமித்துள்ளது. அதனால் ரெம்டெசிவிர் மருந்து புதுச்சேரி அரசு மருந்தகத்தில் விற்பனைக்கு உள்ளது என்று தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story