குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000
குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது.
பரமக்குடி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கொேரானா நிதியாக ரூ.4 ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி முதல் கட்டமாக தற்போது ரூ.2000 வழங்கப்படுகிறது. அந்த திட்டத்தை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் ஆகிய பகுதிகளில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-பரமக்குடி தாலுகாவில் 71 ஆயிரத்து 687 குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண நிதி மூலம் பயன்பெறுவர். தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை சொன்னபடி நிறைவேற்றி வருகிறார். ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும். சொன்னதை செய்யும் அரசு தான் தி.மு.க. அரசு. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவோம். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி, நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம், போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் கதிரவன், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் வக்கீல் பூமிநாதன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story