ஆற்றுப்பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்த கார்


ஆற்றுப்பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்த கார்
x
தினத்தந்தி 15 May 2021 11:31 PM IST (Updated: 15 May 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே ஆற்றுப்பாலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூரை சேர்ந்தவர் மணி (வயது 29).இவர் காரில் சருகணி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவேகம்பத்தூர் ஆற்றுப்பாலத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story