கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்: நாமக்கல்லில் ரூ.5,400 அபராதம் வசூல்


கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்: நாமக்கல்லில் ரூ.5,400 அபராதம் வசூல்
x
தினத்தந்தி 16 May 2021 12:00 AM IST (Updated: 16 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.5,400 அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என கண்காணிக்க நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? எனவும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் முககவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.5 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் தெரிவித்தார்.

Next Story