வேப்பனப்பள்ளியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வேப்பனப்பள்ளியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2021 12:01 AM IST (Updated: 16 May 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி லட்சுமி புரம் தெருவை சேர்ந்தவர்  ஷான் பாஷா. இவருடைய மனைவி சாஹின் தாஜ் (வயது 35). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் ஷான் பாஷாவிற்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாஹின் தாஜூக்கும், கணவர் ஷான் பாஷாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சாஹின் தாஜ் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்த சாஹின் தாஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======

Next Story