பெண்களிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
பெண்களிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 23 பவுன் நகை மற்றும் 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் சாலையில் நடந்தும், மொபட்டில் செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், கேசவன், மணிமாறன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
பறிமுதல்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகைகளை பறித்ததும், இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் மதுரை ஆனையூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா( வயது 24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார்(24) என்பதும் ெ்தரிந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 2 ேபரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 23 பவுன் நகை மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story