25 கடைஈரோட்டில், அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டகளுக்கு சீல்; ரூ.1¼ லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோட்டில், அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில், அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா வைரசின் 2-வது அலையால் தமிழகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்காததால், ஊரடங்கினை கடுமையாக்கிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதைத்தொடா்ந்து தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதில், டீக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும், காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் அரசின் உத்தரவின்படி டீக்கடைகள் எதுவும் நேற்று திறக்கப்படவில்லை. இருப்பினும், புதிய கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்.
ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒரு பழமுதிர் நிலையத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழமுதிர் நிலையத்துக்கு சீல் வைக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
25 கடைகளுக்கு சீல்
இதேபோல் ஈரோடு பெருந்துறை ரோடு, சம்பத் நகர், நசியனூர் ரோடு, சென்னிமலை ரோடு, கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 10 மணிக்கு பிறகு பல கடைகள் செயல்பட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர். நேற்று 25 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அரசின் உத்தரவுகளை பொதுமக்களும், வணிகர்களும் கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story