உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 15 May 2021 10:15 PM GMT (Updated: 15 May 2021 10:15 PM GMT)

ஈரோடு மாநகர் பகுதியில் சம்பத்நகர், பெரியார் நகர், குமலன் குட்டை ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்க கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஈரோடு மாநகர் பகுதியில் சம்பத்நகர், பெரியார் நகர், குமலன் குட்டை ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்க கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
உழவர் சந்தைகளில் வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போதிய இடைவெளியில் பொருட்களை வாங்க, விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று சம்பத்நகர் உழவர் சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை இடைவெளி கடைபிடித்து கடைகள் வைத்திருந்தனர். இதுபோல் பொதுமக்களும் தனி மனித இடைவெளியுடன் வந்து பொருட்கள் வாங்கிச்சென்றனர்.

Next Story