ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்பட்ட பழக்கடைகள் பஸ் நிலையத்துக்கு மாற்றம்


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்பட்ட பழக்கடைகள் பஸ் நிலையத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 15 May 2021 10:29 PM GMT (Updated: 15 May 2021 10:29 PM GMT)

பழக்கடைகள் நேற்று முதல் ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள காலியிடத்திற்கு மாற்றப்பட்டது

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கடந்த ஓராண்டாக தற்காலிக நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக இரவு மொத்த வியாபாரமும், காலையில் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகின்றது.
மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.  
இந்த நிலையில் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் நேற்று முதல் ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள காலியிடத்திற்கு மாற்றப்பட்டது. மாற்று இடத்தில் செயல்பட்டு வரும் பழக்கடைகளில் நேற்று ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story