தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில்  5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 May 2021 6:32 PM IST (Updated: 16 May 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (வயது 43), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன்கள் சங்கர் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் என்ற பொன்ராஜ் (29) ஆகியோரை தருவைகுளம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று கொலை முயற்சி வழக்கில் பன்னீர்குளம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் மாரியப்பன் (42) என்பவரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முனியசாமி, சங்கர், நீலமேகம், சுப்புராஜ் என்ற பொன்ராஜ், மாரியப்பன் ஆகிய 5 பேரையு-ம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 
இந்த உத்தரவு நகலை, சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 68 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story