கோவில்பட்டி, கழுகுமலையில் மது விற்ற 2பேர் கைது


கோவில்பட்டி, கழுகுமலையில் மது விற்ற 2பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2021 6:40 PM IST (Updated: 16 May 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, கழுகுமலையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி மற்றும் கழுகுமலை பகுதியில் சட்டவிரோதமாக  மது விற்பனையில் ஈடுபட்ட 2பேரை  கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 143 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது
கோவில்பட்டி
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையில் போலீசார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி மில் தெருவில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் வளாகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்துகுமாரை (28) போலீசார் கைது செய்தனர். 
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இக்பாலை தேடி வருகின்றனர். அதையடுத்து அங்கிருந்த 95 மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
கழுகுமலை
இதுபோல, கழுகுமலை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வெள்ளப்பனேரி தெற்கு காலனியைச் சேர்ந்த கந்தையா மகன் முருகனை (48) கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 48 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.550ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story