திருவாரூரில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி


திருவாரூரில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி
x
தினத்தந்தி 16 May 2021 7:08 PM IST (Updated: 16 May 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ரேஷன் கடைகளில் கொேரானா நிவாரண தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கும் பணியை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கூட்டுறவு அங்காடியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.75 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது துவாக்குடியில் இருந்து ஆக்சிஜன் வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பு பணிகளில் தீவிரம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கொரோனா நெருக்கடி குறைந்தவுடன் நிச்சயம் தனது சொந்த ஊரான திருவாரூருக்கு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் புலிவலம்தேவா, தாசில்தார் நக்கீரன், துணை பதிவாளர் கார்த்திகேசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சவுந்தரராஜன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொது மேலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story