முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ஆசிரியை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தை சேர்ந்தவர் வசந்தா(வயது52). இவர் அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தை சேர்ந்தவர் வசந்தா(வயது52). இவர் அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதித்தவர்களுக்கு தினமும் 200 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதை தொடர்ந்து ஆசிரியை வசந்தா தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இதேபோல கொரோனா முதல் அலையின் போது முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு இவர், ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story