வாணியம்பாடியில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்

வாணியம்பாடியில் ஒரு தனியார் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னதுபோல், கொரோனா நிதி ரூ.2 ஆயிரத்தை முதல் தவணையாக தற்போது கொடுத்து வருகிறார். ஏனென்றால் மக்கள் இந்தக் கொரோனா காலத்தில் மிகவும் அவதிப்பட்டு வருவதை மக்களின் சுமைகளை அறிந்து ஸ்டாலின் செய்து வருகிறார்.
மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் பேனர்களும், போஸ்டர்களும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-வதாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story