முழு ஊரடங்கு காரணமாக காங்கேயம், தாராபுரத்தில் வாகன போக்குரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


முழு ஊரடங்கு காரணமாக காங்கேயம், தாராபுரத்தில் வாகன போக்குரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
x
தினத்தந்தி 16 May 2021 9:00 PM IST (Updated: 16 May 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக காங்கேயம், தாராபுரத்தில் வாகன போக்குரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

காங்கேயம்
முழு ஊரடங்கு காரணமாக காங்கேயம், தாராபுரத்தில் வாகன போக்குரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனா பாதிப்பு 1008-ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்த முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாகவும், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் காங்கேயத்தில் நேற்று பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட்டுகள் போன்ற அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
காங்கேயம் நகர சாலைகளான திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை, பழையகோட்டை சாலைகளிலும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி அமைதியாக காணப்பட்டது.
மேலும் காங்கேயம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் காங்கேயம் கடைவீதி பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தாராபுரம்
 ஊரடங்கு காரணமாக தாராபுரத்தில் அத்தியாவசிய தேவைகளான
மளிகை, காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சிக்கடைகள் நேற்றைய முன்தினம் வாங்கி வைத்துக்கொண்டனர். அதுபோன்று பொதுபோக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் வாகனப்போக்குவரத்து முடங்கியது. 
இதனால் தாராபுரத்தில் நேற்று முழு ஊரடங்கால் பஸ்நிலையம், பொள்ளாச்சி
ரோடு, கடைவீதி, தாலுகா அலுவலகம், பைபபாஸ்ரோடு உட்பட அனைத்து பகுதிகளும்
வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story