சோளிங்கரில் தடுப்புகளை உடைத்து வெளியில் சுற்றும் பொதுமக்கள்


சோளிங்கரில் தடுப்புகளை உடைத்து வெளியில் சுற்றும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 16 May 2021 10:19 PM IST (Updated: 16 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் தடுப்புகளை உடைத்து வெளியில் சுற்றும் பொதுமக்கள்

சோளிங்கர்

சோளிங்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர் இரண்டாவது தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி சார்பில் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, யாரும் அந்த தெருவுக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து, சீல் வைக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் நோய் தொற்று உள்ள தெருவில் வசிப்பவர்கள் சிலர் சீல் வைக்கப்பட்ட தகடுகளை உடைத்து விட்டு வெளியில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தடுப்புக்காக உடைத்து வெளியில் சுற்றுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 More update

Next Story