மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2021 5:19 PM GMT (Updated: 16 May 2021 5:19 PM GMT)

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தோகைமலை
தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி பாலசமுத்திரம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பெரியகாள் (வயது 69). இவருக்கு வயது முதிர்வின் காரணமாகவும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பெரியகாள் நேற்று முன்தினம் அரளிவிதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பெரியகாளை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பெரியகாள் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பெரியகாள் மகன் மகாமுனி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story