கிருஷ்ணராயபுரம், நொய்யல் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு


கிருஷ்ணராயபுரம், நொய்யல் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 11:00 PM IST (Updated: 16 May 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிருஷ்ணராயபுரம், நொய்யல் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்
கிருமிநாசினி தெளிப்பு
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சார்பாக கொேரானா பரவலை கட்டுப்படுத்தும் விதிமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் யுவராணி அறிவுறுத்தினார். 
15 பேருக்கு தொற்று
நொய்யல் அருகே உள்ள தவிட்டுப்பாளையம், காந்திநகர், பாலத்துறை, பொண்ணியாக் கவுண்டன்புதூர், நடையனூர், தளவாபாளையம், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர், ஊராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி தெளித்து, குளோரின் பவுடர் போட்டனர். மேலும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story