விருத்தாசலம் அருகே கொரோனாவுக்கு முகாசபரூர் ஜமீன் பலி
ஜமீன் பலி
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் பாளையக்காரர் எனப் போற்றப்படும் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் பொன்.பாலதண்டாயுத கச்சிராயர் (வயது 61). இவரது முன்னோர்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் சிற்றரசர்களாகவும், ஆங்கிலயேர் ஆட்சியில் ஜமீன்களாகவும் இருந்தனர். இந்த வகையில் ஜமீனான பொன்.பாலதண்டாயுதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்.பாலதண்டாயுதத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்.பாலதண்டாயுதம் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் முகாசபரூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. பாலதண்டாயுதத்துக்கு மல்லிகா என்ற மனைவியும், கிருத்திகா (26), தீபிகா (21) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மல்லிகா தற்போது விருத்தாசலம் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்.பாலதண்டாயுதம் மறைவுக்கு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story