தடைகளை மீறி செயல்பட்ட தரைக்கடைகள்


தடைகளை மீறி செயல்பட்ட தரைக்கடைகள்
x
தினத்தந்தி 16 May 2021 6:28 PM GMT (Updated: 16 May 2021 6:28 PM GMT)

தடைகளை மீறி தரைக்கடைகள் செயல்பட்டன

உப்பிலியபுரம், 
உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாரச்சந்தைகள் தடை செய்யப் பட்டுள்ளன. கொரோனா பரவலைத்தடுக்க சாலையோர கடைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையத்தில் வாரச்சந்தை மூடியதை அடுத்து, ரெட்டியார் தெருவில் நேற்று முன்தினம் மாலை சந்தை கூடியிருந்தது. சாலை முழுக்க இருபுறமும் காய்கறி கடைகள், பழக்கடைகள் என களை கட்டியது. பொதுமக்கள், வியாபாரிகள் பலர் முககவசம் இன்றியும், சமூக இடைவெளி இன்றியும் கூடி இருந்தனர். பொது மக்களும் கொரோனா பயமின்றி உலா வந்தது, சமூக ஆர்வலர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story