ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில் ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சுகாதார ஆய்வாளர் பலியானார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில் ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சுகாதார ஆய்வாளர் பலியானார்.
259 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி நகரத்தில் 53 பேர், வடக்கு ஒன்றியத்தில் 40 பேர், தெற்கு ஒன்றியத்தில் 44 பேர், ஆனைமலையில் 60 பேர், சுல்தான்பேட்டையில் 5 பேர், கிணத்துக்கடவில் 57 பேர் என்று மொத்தம் 259 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியானது.
சுகாதார ஆய்வாளர் பலி
பொள்ளாச்சி அருகே உள்ள வளர்ந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வல்லவன் (வயது 52) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தடுப்பு நடவடிக்கை
எனவே நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பிளீச்சிங் பவுடர் தூவுதல், கிருமி நாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அத்தியாவசிய தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவனத்தில் 27 பேருக்கு தொற்று
மேலும் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 27 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story