ஆக்சிஜன் வசதியுடன் தயாரான பள்ளி வாகனங்கள்
ஆக்சிஜன் வசதியுடன் தயாரான பள்ளி வாகனங்கள்
மதுரை
கொரோனா 2-வது அலை தீவிரமாக தமிழகத்தில் பரவி வரக் கூடிய சூழலில் தற்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் நோயாளிகளை அழைத்து வருவதில் வாகன வசதியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தபோதிலும் முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மக்களும் பல்வேறு உதவிகளை நிவாரணமாக செய்து வருகின்றனர். தனியார் தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் முதல்-அமைச்சர் நிவாரண திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் மதுரை மேலூரை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று தங்களது பள்ளி வாகனங்களில் 3 வாகனத்தை ஆக்சிஜன் கூடிய இருக்கை வசதிகளாக மாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கியுள்ளனர். இந்த வாகனத்தில் இருக்கை வசதிகள் மற்றும் மின் விசிறி வசதி, 3 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வரக்கூடிய நபர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் வசதி தேவைப்பட்டால் இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்வதற்கும், கிராமங்களிலிருந்து ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் கிடைக்க கால தாமதம் ஏற்பட்டால் உடனடியாக இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக பள்ளி நிர்வாகம் கொரோனா காலம் முடியும் வரை பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனைக்கு நேற்று ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகத்தினரின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story