ஜெயங்கொண்டத்தில் மழை
ஜெயங்கொண்டத்தில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசி அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதைத்தொடர்ந்து இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென தூறலாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story