ஈரோடு மாநகரில் கொரோனா தொற்றால் 32 இடங்களில் 2,760 பேர் தனிமை
ஈரோடு மாநகரில் கொரோனா தொற்றால் 32 இடங்களில் 2 ஆயிரத்து 760 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாநகரில் கொரோனா தொற்றால் 32 இடங்களில் 2 ஆயிரத்து 760 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரே பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதி தடுப்புகளை கொண்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பு, குடிசை வீடுகளாக இருந்தால் சம்மந்தப்பட்ட வீடு மட்டும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தனிமைப்படுத்தப்படுகிறது.
2,760 பேர் தனிமை
அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம், மூலப்பாளையம், பெரியார் நகர், மேற்கு பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட 32 இடங்களில் 2 ஆயிரத்து 760 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் கொரோனா பரிசோதனையும், காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story