கொரோனாவில் இருந்து மீண்ட புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரி திரும்புகிறார்
கொரோனாவில் இருந்து மீண்டு இன்று புதுச்சேரி திரும்பும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ரங்கசாமிக்கு கொரோனா
புதுச்சேரி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் பூரணமாக குணமடைந்தார்.இதையடுத்து அவர் இன்று (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புதுச்சேரி திரும்புகிறார். இருப்பினும் அவர், டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவர், அரசு அதிகாரிகளுடன் செல்போன் மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர்களை தேர்வு செய்தல், இலாகாக்கள் ஒதுக்குதல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் செல்போன் மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். தீவிர ஆலோசனைக்கு பிறகு ரங்கசாமி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story