தொற்று ஏற்படாமல் தடுக்க இடமாற்றம் செய்ய முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து காய்கறி சந்தையை மூடினர்

காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூடுவதால் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து காய்கறி சந்தையை மூடினர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய காய்கறி சந்தையான ராஜாஜி காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கிட ஏராளமான பொதுமக்கள் கூடுவதால், தொற்று ஏற்படாமல் தடுக்க காய்கறிச் சந்தை வேறு இடத்திற்கு மாற்ற பெரு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட்டு வருவதால் காய்கறி சந்தையை வியாபாரிகள் நலன் கருதி வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் காய்கறி சந் தையை மூடி, காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு இடமாற் றம் செய்வதை கண்டித்து வியாபாரிகள் நேற்று காய்கறி சந்தையை மூடிவிட்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை வாங்க வந்த சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காஞ்சீபுரம் நகரின் முக்கிய காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளதால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்களும், காய்கறி வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story






