சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்: கொரோனா தொற்றுக்கு அ.ம.மு.க. பிரமுகர் சாவு


சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்: கொரோனா தொற்றுக்கு அ.ம.மு.க. பிரமுகர் சாவு
x
தினத்தந்தி 18 May 2021 4:55 PM IST (Updated: 18 May 2021 4:55 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்: கொரோனா தொற்றுக்கு அ.ம.மு.க. பிரமுகர் சாவு.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாமல்லன் நகர் பகுதியில் வசிப்பவர் ந.மனோகரன் (வயது 58), இவர் முன்னாள் சின்ன காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவராக இருந்தவர். காஞ்சீபுரம் நகர அ.ம.மு.க. நகர செயலாளராக இருந்து வந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில், காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். வாக்குப்பதிவு எண்ணும் பணியின்போது அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பாக்கியா என்ற மனைவியும் சூர்யா, ஸ்வேதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த துயரச்செய்தி கேள்விப்பட்டதும், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மொளச்சூர் இரா.பெருமாள், அ.ம.மு.க. நிர்வாகிகள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், தம்மனூர் இ.தாஸ், கூரம் பச்சையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
1 More update

Next Story