உடுமலையையடுத்த திருமூர்த்திமலை பகுதியில் கொடுக்காப்புளி சாகுபடி செய்யப்படுகிறது. கொடுக்காப்புளி பழங்களை கிளிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


உடுமலையையடுத்த திருமூர்த்திமலை பகுதியில் கொடுக்காப்புளி சாகுபடி செய்யப்படுகிறது. கொடுக்காப்புளி பழங்களை கிளிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 19 May 2021 4:30 PM GMT (Updated: 2021-05-19T22:00:27+05:30)

உடுமலையையடுத்த திருமூர்த்திமலை பகுதியில் கொடுக்காப்புளி சாகுபடி செய்யப்படுகிறது. கொடுக்காப்புளி பழங்களை கிளிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

போடிப்பட்டி, 
உடுமலையையடுத்த திருமூர்த்திமலை பகுதியில் கொடுக்காப்புளி சாகுபடி செய்யப்படுகிறது. கொடுக்காப்புளி பழங்களை கிளிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சின்ன சின்ன சந்தோஷங்கள்
40 வயதை கடந்த பெரும்பாலான கிராமவாசிகளுக்கு கொடுக்காப்புளி பறித்ததும், பள்ளிக்கு முன் கடை விரித்திருக்கும் பாட்டியிடம் 10 பைசாவுக்கு கொடுக்காப்புளி வாங்கி சாப்பிட்டதும் கண்டிப்பாக நினைவிலிருக்கும். வயல்வெளிகளில் வரப்போரங்களிலும், கிணற்றுமேடுகளிலும் வளர்ந்து நிற்கும் கொடுக்காப்புளி மரங்களை தேடித் தேடி அணில்களோடும், கிளிகளோடும் போட்டி போட்டு கொடுக்காப்புளியை சேகரிப்பது சிறுவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்தது.
இன்றைய கிராமங்களில் கொடுக்காப்புளி மரங்களும் இல்லை. அவற்றை தேடி அரைக்கால் டவுசரோடு கூட்டமாக சுற்றும் சிறுவர்களையும் காணவில்லை. விஞ்ஞான வளர்ச்சி உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்து விட்டது.  இதுபோன்ற சின்ன சின்ன சந்தோஷங்களையும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் தொலைத்து விட்டது. சிறு வயதில் இலவசமாகவும் மிக குறைந்த விலையிலும் கிடைத்த கொடுக்காப்புளி இன்று நகரப் பகுதிகளில் ஒரு கிலோ ரூ. 600 வரை விற்பனையாகி வருகிறது. இதுவே ஒருசில விவசாயிகள் கொடுக்காப்புளி சாகுபடி செய்வதற்கு தூண்டுகோலாகவும் இருந்துள்ளது.
நல்ல மகசூல்
அந்தவகையில் உடுமலையையடுத்த திருமூர்த்திமலை பகுதியில் கொடுக்காப்புளி சாகுபடி செய்துள்ள விவசாயி செந்தில் ஆறுமுகம் இதுகுறித்து கூறியதாவது:-
தண்ணீர் பற்றாக்குறையால் தரிசாக நிலத்தை போட்டிருக்கும் விவசாயிகளுக்கு கொடுக்காப்புளி சிறந்தபயிராகும். இது அனைத்து வகையான மண்ணிலும் வளரக் கூடியது என்றாலும் செம்மண் மற்றும் சரளை மண்ணில் சிறப்பாக வளரும். இவற்றில் ஒட்டு ரகம், நாட்டு ரகம் என்று 2 விதங்கள் உள்ளது. நாட்டு ரகங்கள் சற்று உயரமாக வளர கூடியவை என்பதால் அறுவடை செய்வது சிரமமாக இருக்கும். மற்றபடி இரண்டும் நல்ல மகசூல் தரக்கூடியதாகவே உள்ளது.
கொடுக்காப்புளி நடவு செய்வதற்கு முதலில் 3 அடி அகலம் 3 அடி நீளம் மற்றும் 3 அடி ஆழத்தில் குழி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த குழிக்குள் வண்டல் மண் மற்றும் குப்பை எருவை கலந்து போட்டு ஒரு மாதம் வரை அப்படியே விட்டு விட வேண்டும். அதன்பிறகு நல்ல தரமான நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 30 அடி அளவுக்கு இடம் விடுவதன் மூலம் மரம் கிளைத்து வளர்வதற்கு போதுமான இடம் கிடைக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடவு செய்தால் மழையில் நன்கு செழிப்பாக வளரும். 
காய்
கொடுக்காப்புளி மரங்கள் நடவு செய்த 6 வது மாதத்திலேயே பூக்கத் தொடங்கி விடும்.அந்த பூக்களை உதிர்த்து விட்டால்தான் மரம் நன்கு பருமனாகவும் வலுவாகவும் வளரும். இதனை தொடர்ந்து 18 மாதங்களுக்கு பிறகு பூக்களை அப்படியே விட்டு விட்டால் காய்க்க தொடங்கி விடும். ஆண்டுக்கு 2 முறை அடியுரம் கொடுப்பதன் மூலம் நல்ல மகசூல் கொடுக்கும். பூச்சி, நோய் தாக்குதல் இல்லாததால் அதிக மகசூல் கொடுக்கக் கூடிய பயிராக கொடுக்காப்புளி உள்ளது.
மலைவாழ் கிளிகள்
ஆனால் இந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியதாக இருப்பதால் அலெக்ஸாண்ட்ரியா கிளி எனப்படும் மலைவாழ் கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து கொடுக்காப்புளி பழங்களை மட்டுமல்லாமல் காய்களையும் தின்று சேதப்படுத்துகிறது. 

Next Story