திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 590 பேருக்கு கொரோனா.4 பேர் பலி


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 590 பேருக்கு கொரோனா.4 பேர் பலி
x
தினத்தந்தி 19 May 2021 5:20 PM GMT (Updated: 2021-05-19T22:50:41+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 590 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

590 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 590 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

4 பேர் பலி

அதுமட்டுமின்றி 4 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 
நேற்று வரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 32 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 27 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,594 ேபர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story