திருக்கோவிலூர் பகுதியில் சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


திருக்கோவிலூர் பகுதியில் சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 May 2021 5:28 PM GMT (Updated: 2021-05-19T22:58:08+05:30)

திருக்கோவிலூர் பகுதியில் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 16 பேரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 34 பேருக்கு அபராதம் விதித்தனர்.

திருக்கோவிலூர்


ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும்போது முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிலர் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

34 பேருக்கு அபராதம்

அதன்படி திருக்கோவிலூர் மற்றும் அதன் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 மேலும் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற 4 பேருக்கும் அபராதம் விதித்தனர். மேலும் 249 பேர் மீது மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

Next Story