வீட்டுக்குள் புகுந்த பாம்பு


வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 19 May 2021 6:24 PM GMT (Updated: 2021-05-19T23:54:22+05:30)

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிப்பட்டது.

நொய்யல்
கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள புகழிநகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரன் (வயது 50). இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதைப் பார்த்ததும் நாகேஸ்வரன் அக்கம் பக்கத்தினர் அழைத்து அந்த பாம்பை விரட்டினார். ஆனால் பாம்பு வெளியே செல்லவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Next Story