லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலி


லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 19 May 2021 6:33 PM GMT (Updated: 2021-05-20T00:03:48+05:30)

லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார்.

திருமயம், மே.20-
திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 37). இவர் நமணசமுத்திரம் குடிநீர் விற்பனை நிலையத்தில் மினி லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் திருமயத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியை ஓட்டிச் சென்றார். புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நகரப்பட்டி அருகே சென்றபோது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து துரை லாரியை சாலையோரம் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story