மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தினத்தந்தி 20 May 2021 1:17 AM IST (Updated: 20 May 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

பேரூர்

கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (எ) அருள்குமார் (வயது 30). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. 

இவர், நேற்று முன்தினம் தெனமநல்லூரிலுள்ள சிவகுமார் என்பவரின் தோட்டத்தில் தென்னை காய் உரிக்கச் சென்றுள்ளார். 

தேங்காயை உரிப்பதற்காக, கம்பியை கீழே நிலத்தில் ஊன்றும் போது எதிர்பாராதவிதமாகஅருகில் இருந்த மின் ஒயரில் பட்டதால், மாரியப்பன் தூக்கி வீசப்பட்டார்.  

உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஓனாப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 


இதுகுறித்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
1 More update

Next Story