போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேர் கொரோனா தொற்றுக்கு பலி


17 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
x
17 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
தினத்தந்தி 19 May 2021 8:03 PM GMT (Updated: 2021-05-20T01:33:34+05:30)

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

கோவை

கோவையில் நேற்று ஒரேநாளில் புதிதாக 3,250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 151 ஆக அதிகரித்து உள்ளது.


 கோவையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 9 ஆயிரத்து 584 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் (வயது 52) கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் குணமடைந்ததும் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 3 ஆண்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பெண்கள் உள்பட மொத்தம் 17 பேர் நேற்று உயிரிழந்தனர். கோவையில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 922 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2,012 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 97 ஆயிரத்து 40 தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்து உள்ளனர். தற்போது 27 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story