மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசம்


மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 19 May 2021 8:14 PM GMT (Updated: 2021-05-20T01:44:27+05:30)

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.

கொள்ளிடம்டோல்கேட், 
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி, கீழத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் பவித்ரன் (வயது 21). இவர் நேற்று காய்கறி வாங்குவதற்காக நம்பர் 1 டோல்கேட் கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அங்கு காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டாா். உத்தமர்கோவில் அருகே உள்ள ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் ஓடிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார், ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story