சேலம் மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு-சுற்றுலா வந்த வாலிபர்களை திருப்பி அனுப்பினர்


சேலம் மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு-சுற்றுலா வந்த வாலிபர்களை திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 19 May 2021 10:49 PM GMT (Updated: 2021-05-20T04:19:51+05:30)

சேலம் மாவட்ட எல்லையான தம்மம்பட்டியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகிறார்கள். அந்த வழியாக சுற்றுலா வந்த வாலிபர்களை திருப்பி அனுப்பினர்.

தம்மம்பட்டி:
சேலம் மாவட்ட எல்லையான தம்மம்பட்டியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகிறார்கள். அந்த வழியாக சுற்றுலா வந்த வாலிபர்களை திருப்பி அனுப்பினர்.
கண்காணிப்பு
உலக மக்களையே நடுங்க வைத்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சேலம் மாவட்ட எல்லையான தம்மம்பட்டியில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், பெரியசாமி மற்றும் போலீசார் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களிடம் எந்த ஊரிலிருந்து வாகனம் வருகிறது, இ-பதிவு சான்று உள்ளதா என தகவல் கேட்டறிந்தனர். முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தி் அனுப்பி வைத்தனர்.
திருப்பி அனுப்பினர்
நேற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அந்த வாலிபர்கள், விடுமுறை என்பதால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவிக்கு சுற்றுலா செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் சுற்றுலா வந்த வாலிபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வெறிச்சோடிய சாலைகள்
தம்மம்பட்டி பகுதியில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. காலை 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தம்மம்பட்டி பகுதியில் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story