சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
x
தினத்தந்தி 20 May 2021 5:16 PM IST (Updated: 20 May 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இன்று காற்றுடன் மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், போரூர், ஆலந்தூர், அடையாறு, தரமணி, ராமாபுரம், வண்டலூர், தாம்பரம், பெருங்குளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது

மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 More update

Next Story