விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி
x
தினத்தந்தி 20 May 2021 3:50 PM GMT (Updated: 2021-05-20T21:20:42+05:30)

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி உதவி வழங்கினார்.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜெயேந்திர பாண்டி என்பவர் மின்சார விபத்தில் உயிரிழந்தார். கடம்போடை கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில் இறந்த குடும்பத்தினரை முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, முதுகுளத்தூர் நகர் செயலாளர் ஷாஜகான், நிர்வாகி சத்தியேந்திரன் ஆகியோர் அமைச்சர் வழங்கிய நிதி உதவியை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினர். இதில் ஊராட்சி தலைவர்கள் ஜெயலட்சுமி வடமலை, முத்துப்பாண்டி, மணிமேகலை, முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story