புதிய உச்சமாக 3335 பேருக்கு கொரோனா


புதிய உச்சமாக 3335 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2021 4:52 PM GMT (Updated: 2021-05-20T22:22:48+05:30)

புதிய உச்சமாக 3335 பேருக்கு கொரோனா

கோவை

கோவையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் புதிய உச்சமாக 3,335 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 20 பேர் பலியாகினர்.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று குறையாததால் தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

கோவையிலும் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் புதிய உச்சமாக கோவையில் நேற்று ஒரே நாளில் 3,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதுவரை இல்லாத மிக அதிகமாக பாதிப்பு ஆகும்.. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 493 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

20 பேர் பலி

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. நேற்று முன்தினம் 17 பேர் இறந்தனர். இந்த நிலையில், நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். இதன் மூலம் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 942 ஆக உயர்ந்து உள்ளது.


கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,148 குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 99,188 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 28 ஆயிரத்து 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


மாவட்டத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 3,570 ஆக்சிஜன் படுக்கை வசதிகளில் 2 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. 1 அவசர சிகிச்சை படுக்கை வசதி மட்டுமே காலியாக உள்ளதாக சுகாதார துறை வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



Next Story