திருவண்ணாமலை மாவட்டத்தில்ஒரே நாளில் 674 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில்ஒரே நாளில் 674 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2021 4:59 PM GMT (Updated: 2021-05-20T22:29:09+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில்ஒரே நாளில் 674 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், மாலையில் நடமாட்டம் குறைந்து விடுகின்றது. சில பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டத்தில் ஒரே நாளில் 674 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களிலும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மாவட்டத்தில் நேற்று வரை 32 ஆயிரத்து 964 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story