கண்டாச்சிபுரம் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கண்டாச்சிபுரம் அருகே  ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 May 2021 5:28 PM GMT (Updated: 20 May 2021 5:28 PM GMT)

குண்டர் சட்டம் பாய்ந்தது

விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடந்த மாதம் ரியல் எஸ்டேட் உரிமையாளரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பூர் மாவட்டம் முத்தூர் அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஓட்டக்காது என்கிற செந்தில் (47) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் செந்தில் மீது ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருடைய குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அண்ணாதுரை, செந்திலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செந்திலை கண்டாச்சிபுரம் போலீசார் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்ததோடு, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்திலிடம் சிறை அலுவலர் மூலம் வழங்கினார். 

Next Story