குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை சைனகுண்டா கானாற்றில் வெள்ளப்பெருக்கு


குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை சைனகுண்டா கானாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 20 May 2021 5:37 PM GMT (Updated: 20 May 2021 5:37 PM GMT)

குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை சைனகுண்டா கானாற்றில் வெள்ளப்பெருக்கு

குடியாத்தம்

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மிதமான மழை பெய்தது. மழைகாரணமாக தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருந்தது. குடியாத்தம் நகர்புற பகுதிகளில் 24 மில்லி மீட்டர் மழையும், மேல் ஆலத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் 31 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.

 குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் இரண்டு மணி நேரம் நல்ல மழை பெய்தது. மேலும் சைனகுண்டாவை ஒட்டி உள்ள ஆந்திர மாநில பகுதிகளான பண்டலதொட்டி, கொதலமடுகு பகுதியிலும் மழை பெய்தது. அதனால் நேற்று அதிகாலை முதல் சைனகுண்டா கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து நேற்று இரவு வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

கோடை காலத்தில் பெய்த மழையால் கானாற்றில் வெள்ளம் செல்வதை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

Next Story