பொள்ளாச்சி பகுதியில் 240 பேருக்கு கொரோனா


பொள்ளாச்சி பகுதியில் 240 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2021 5:44 PM GMT (Updated: 2021-05-20T23:14:55+05:30)

பொள்ளாச்சி பகுதியில் 240 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் முதியவர் பலியானார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 240 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் முதியவர் பலியானார். 

கொரோனா பாதிப்பு

பொள்ளாச்சி நகரில் நேரு நகர், ஊத்துக்காடு ரோடு, ஜோதி நகர், டி.கோட்டாம்பட்டி, வடுகபாளையம், குமரன் நகர், குறிஞ்சி நகர், மகா லிங்கபுரம், டீச்சர்ஸ் காலனி, கலைவாணர் வீதி, நந்தனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 32 பேருக்கு கொரோனா உறுதியானது. 

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், சமத்தூர், ரங்கசமுத்திரம், நஞ்சேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 32 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி, குள்ளக்காபாளையம், போடிபாளையம், ராசக்காபாளையம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் 18 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

முதியவர் சாவு

ஆனைமலை ஒன்றியத்தில் 63 பேர், கிணத்துக்கடவில் 28 பேர், வால் பாறையில் 3 பேர், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 64 பேர் என்று பொள்ளாச்சி மற்றும்  அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மொத்தம் 240 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது.  

அதுபோன்று ஆனைமலை அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன.

சிறப்பு மருத்துவ முகாம் 

கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் வேளாங்கண்ணி உயிரிழந்ததை தொடர்ந்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

 இதில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா மேற்பார்வையில் டாக்டர்கள் அருண் பிரகாஷ், திலீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு 204 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 


Next Story