டீ மொய்விருந்து மூலம் வசூலித்த ரூ.20 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய டீக்கடைக்காரர்


டீ மொய்விருந்து மூலம் வசூலித்த  ரூ.20 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய டீக்கடைக்காரர்
x
தினத்தந்தி 20 May 2021 5:56 PM GMT (Updated: 20 May 2021 5:56 PM GMT)

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரத்தை டீக்கடைக்காரர் வழங்கினார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் நால்ரோடு கடை வீதியில் டீக்கடை நடத்தி வருபவர் பகவான் (வயது 45). கஜா புயலின் போது பாதிக்கப்படட பொதுமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். இதையடுத்து கூலித்தொழிலாளிகள் கடையில் டீ குடித்து வைத்து இருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்தார்.இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு அறித்துள்ளது. தனது கடைக்கு டீக்குடிக்க வருகின்ற வாடிக்கையாளர்களிடம் டீ மொய் விருந்து என்ற பெயரில் தனது கடையில் குடிக்கின்ற டீ மற்றும் பலகாரம் சாப்பிட்ட பணத்தை தனது கடையில் வைக்கப்பட்ட உண்டியலில் செலுத்தி உதவிடுமாறு நூதன முறையில் கேட்டு கொண்டார். அதன்படி தான் வசூலித்த ரூ.20 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் காசோலையாக வழங்கினார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டினர்.

Next Story