பராமரிப்பு பணி காரணமாக மாயனூர் ரெயில்வேகேட் மூடல்


பராமரிப்பு பணி காரணமாக மாயனூர் ரெயில்வேகேட் மூடல்
x
தினத்தந்தி 20 May 2021 6:04 PM GMT (Updated: 2021-05-20T23:34:04+05:30)

பராமரிப்பு பணி காரணமாக மாயனூர் ரெயில்வேகேட் மூடப்பட்டது

கிருஷ்ணராயபுரம் 
கரூர்-திருச்சி இடையே மாயனூர் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் மாயனூர் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள், கதவணை, சிறுவர் பூங்கா, கோவில் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை இணைக்ககூடிய இடத்தில் இந்த ரெயில்வே கேட் அமைந்துள்ளது. தற்போது மாயனூர் ரெயில்வேகேட் அருகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நேற்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்கள் மூடப்பட்டிருக்கும்.  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் எல்சி 43, ரெங்கநாதபுரம் ரெயில்வே கேட் வழியாக செல்லுமாறும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

Next Story