தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்


தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்
x
தினத்தந்தி 20 May 2021 6:04 PM GMT (Updated: 2021-05-20T23:34:20+05:30)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த மார்க்கெட் தற்காலிக பஸ் நிலைய பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கு மழை காரணமாக தண்ணீர் தேங்கியதால் வியாபாரிகள் அங்கிருந்து மில்லர்புரம் பகுதிக்கு சென்றனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காததால் மீண்டும் பழைய மார்க்கெட்டில் கடைகள் இயங்கி வந்தன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மார்க்கெட்டில் இருந்த 43 கடைகள் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்வதற்கும், கிருமி நாசினி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கொரோனா விதிமுறை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணித்து வருகின்றனர்.

Next Story